25 Apr 2017

பணம் மாற்றும் குணம்


பணம் மாற்றும் குணம்
            நல்ல மனமா?
            நிறைய பணமா?
            என்ற கேள்விக்கு நிறைய பேர் டிக் அடிப்பது இரண்டாவது ஆப்ஷனைத்தான். பணம்தான் தேவை என்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கிறார்கள். அதிலும் வாழ்வதற்கு நிறைய பணம்தான் தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக எத்தகைய இழி செயல்களிலும் இறங்கத் தயாராக இருக்கிறார்கள்.
            பணத்திற்காகச் செய்யப்படும் அல்பத்தனங்கள் நியாயப்படுத்தப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
            இல்லாதவன் பணத்திற்காக அலைவதை விட மோசமாக, பணம் அபரிமிதமாக இருக்கிறவனும் பணத்திற்காக அலைகிறான்.
            தர்மம், நியாயம் என்று பேசும் நாம் பணம் சம்பாதிக்கும் வழியில் மட்டும் வாகாக அதை ஜீவாதார உரிமை என்ற குதர்க்கத்தில் தூக்கிப் போட்டு அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க முனைகிறோம்.
            நாம் சுமப்பது பாவத்தின் மூட்டை என்பது தெரிந்தும், பக்கத்தில் இன்னொருவன் இதை விட பெரிய மூட்டையைச் சுமப்பதாக ஆறுதல் படுத்திக் கொள்ளும் நம் மனநிலை இருக்கிறதே! உலகின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பாளர்களில் நாமும் ஒருவர்தான்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...