26 Apr 2017

இருந்து விட்டுப் போங்கள்!


இருந்து விட்டுப் போங்கள்!
அன்பான காதலை
அசிங்கம் பிடித்த சாதியோடு கலந்து
அவர்கள்
ஒரு கெளரவக் கொலையை
நிகழ்த்திய பொழுதில்தான்
கவிதையை வீசியெறிந்து
அரிவாள் எடுத்தது.

அழித்தக் கற்பைப் பற்றி
குற்ற உணர்வு இன்றி
அவர்கள்
கற்பழித்தது குறித்து
பெருமை பேசிய பொழுதில்தான்
சமாதானத்தைத் தூக்கியெறிந்து
துப்பாக்கி எடுத்தது.

வியாபார லாபத்திற்காக
ஆட்சியை வளைத்து
அவர்கள்
அதிகாரத்தைப் பிடித்து
வாழ்வாதாரத்தை அழித்தப் பொழுதில்தான்
அமைதிப் போராட்டத்தை விடுத்து
வெடிகுண்டுகளை எடுத்தது.

எங்கள் அரிவாளும், துப்பாக்கியும், வெடிகுண்டுகளும்
உங்களுக்கு
வன்முறையின் வடிவங்கள் என்றால்
நாங்கள் வன்முறையாளர்களாகவே
இருந்து விட்டுப் போகிறோம்,
நீங்கள் உலக சமாதானத்தைக் காப்பவர்களாகவே
இருந்து விட்டுப் போங்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...