26 Apr 2017

காசு வந்த நேரம்


தர்மத்தின் திட்டு
            "‍அஞ்சு ஓட்டுக்கும் கிடைக்கப் போற பத்தாயிரத்தையும் இல்லாமப் பண்ணப் போறீயா?" இடைத்தேர்தலில் சுயேச்சையாக நிற்கப் போவதாகச் சொன்ன திலகனைத் திட்டிக் கொண்டிருந்தாள் அவன் தர்ம பத்தினி தமயந்தி.
*****
காசு வந்த நேரம்
            "மருமக வந்த நேரம், இடைத்தேர்தலும் வந்துச்சு!" கையில் புழங்கும் காசை பெருமையோடு பார்த்துக் கொண்டே புளங்காகிதம் அடைந்தார் கருணாகரன்.
*****
ஆஹாஹா பிடிச்சிட்டாங்கப்பா!
            "இரண்டு லட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அபராதம்!" செய்தி வந்த நாளன்றே பிடிபட்ட இடைத்தேர்தல் எலெக்சன் ஏஜென்ட் ஏகாம்பரத்திடம் இருபது லட்சம் இருந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...