4 Apr 2017

புல் விளையாத மூளை


நோ ரெஸ்ட்
            வீட்டில் இருந்தால் வேலை பெண்டு கழண்டு விடும் என்று ஜூரத்தோடு ஆபீஸூக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள் ரேவதி.
*****
நான்... ஆனால்...
            "அனைவரையும் ரிசார்ட்டில் தங்க வைப்பேன்!" என்று இறுதியாக எழுதி முடித்தான் பைரவன், "நான் முதலமைச்சரானால்..." என்ற தலைப்பிலான கட்டுரையை.
*****
புல் விளையாத மூளை
            டவுனில் புல்லு விளையாத ஒரு ப்ளாட்டுக்காக, கிராமத்தில் நெல்லு விளையும் பத்து ஏக்கர் நிலத்தை விற்பதென முடிவெடுத்தார் மயில்சாமி.
*****

No comments:

Post a Comment