10 Apr 2017

மரம் போல்வர்


மரம் போல்வர்
வேலி தாண்டி வந்த
கிளைகளை வெட்டி
வேர்களில் கொட்டினான்
பாலிதீன் குப்பைகளை.
சில நாட்களில்
கை நீட்ட மறந்து
பட்டுப் போனது மரம்.
மரம் வளர்ப்புப் பற்றி
பெருமையோடு பேச ஆரம்பித்தான்
வீட்டுக்குள்
போன்சாய் மரங்களை வளர்க்கும் அவன்.
*****

வாழ்க்கை
ஓட்டு வீட்டிற்குள் வாழும்
ஓடு சுமந்து செல்லும்
நத்தை.
*****

No comments:

Post a Comment