2 Apr 2017

வேட்டல்


வேட்டல்
"வருஷம் முழுக்க
மாலை போட்டா என்ன?"
ஐயப்பஞ்சாமியிடம் கேட்கிறான்
சாமி என்ற அழைக்கப்பட்டதில்
தலை நிமிர்ந்த
தையான்.
*****

பாடங்கள்
மகனின் கனவுகளை
வெட்டிக் கொண்டே இருந்தவர்
அவரையும் அறியாமல்
பாடம் சொல்லியிருந்தார்,
"வெட்டிகிட்டே இருக்குற மரம்தான்
துளிர்க்கும்!"
*****

இருக்கலாம்
உன்னுடைய குப்பை
பொறுக்குபவனுக்குத்
தேவையாக இருக்கலாம்.
உன்னுடைய தேவை
இயற்கைக்கு
குப்பையாக இருக்கலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...