3 Apr 2017

புன்னகை


புன்னகை
"அம்பாள் ஒரு சக்தி தெய்வம்"
என்பாள் அம்மா.
"பெண் பூசாரி வைத்துக் கொள்ளும்
சக்தி மட்டும் விதிவிலக்கு" என்பாள் மகள்.
"வாய்க்கொழுப்பு மட்டும் அடங்குதா பாரு"
என்பாள் அம்மா.
"உமையாம்பிகான்னு பேர் வெச்சுகிட்டு
அந்தச் சக்தி கூட இல்லன்னா
எப்படிம்மா?" எனக் கேட்கும் மகளைப்
பார்த்து புன்னகைக்கிறது
அம்பாளின் சிவப்புக்கல் மூக்குத்தி.
*****
            - நன்றி ஆனந்த விகடன் (05. 04. 2017 இதழ் - பக்கம் 28)

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...