5 Apr 2017

ரகசிய ஆசைகள்


ரகசிய ஆசைகள்
ஒரு பெண்ணின் ரகசிய ஆசைகளை
இங்கே பேசி விட முடியாது.
கலாச்சாரக் காவலர்கள்
கொடி பிடித்து வந்து விடுவார்கள்.
ரகசிய ஆசைகளுக்கு
அதிசய டிமாண்ட் வர வைத்து விடுவார்கள்.
ரகசியமாக பின் அதை
அவர்கள் வாசித்துக் கொள்வார்கள்.
ஆதாமும், ஏவாளும்
இணைந்ததைப் புதிதாகச் சொல்ல
என்ன இருக்கிறது
என்று யார் யோசிக்கிறார்கள்?
இது புதுமையில்லை
புரட்சியில்லை என்றாலும்
புதிதாகச் சொல்வதைப் போல
கேட்பவர்களை என்ன சொல்ல?
நான் என் ரகசிய ஆசைகளை
சொல்லப் போகிறேன்
என் அன்பானவனே
காது கொடு!
ஒட்டுக் கேட்பவர்கள்
கேட்டுக் கொள்ளட்டும்.
இணையத்தில் பரப்புபவர்கள்
பரப்பிக் கொள்ளட்டும்.
காமத்தைக் கொண்டாட முடியாதவர்கள்
இதைக் கேட்டோ, படித்தோ
நிறைவேறாத ஏக்கங்களை
தணித்துக் கொள்ளட்டும்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...