24 Apr 2017

தன்மானம் கற்க! கற்ற பின் நிற்க!


தன்மானம் கற்க! கற்ற பின் நிற்க!
            ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடர்கள் பற்றி பேசியதற்காக நடிகர் சத்யராஜை இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். அந்த ஒன்பது ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
            சத்யராஜூம் பெருந்தன்மையாக மன்னிப்பு என்ற வார்த்தைக்குப் பதிலாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறார். புரட்சித் தமிழன் அல்லவா!
            பாகுபலி (பாகம்-2) கன்னடம் பேசும் கர்நாடகத்தில் வெளியாகா விட்டாலும் மிகப் பெரிய வெற்றி பெறும். போட்ட காசை ஈட்டும். இருந்தாலும் கன்னடத்தில் வெளியாகா விட்டால் அதனால் ஏற்படும் லாபத்தில் குறைவுதானே ஏற்படும். அந்த லாபக் குறைவை விட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு நாடகம் எல்லாம்.
            பாகுபலியில் (திரைப்படத்தில்) கட்டப்பா ஏன் பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற கேள்வியை விட, கட்டப்பாவான சத்யராஜ் ஏன் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்ற கேள்விதான் இப்போது அதிகம் எழுப்பப்படுகிறது?
            இதற்கு கமலஹாசன் சத்யராஜைப் பெரிய மனிதன் என்ற வார்த்தையால் பெரிய அளவில் பெருமை படுத்துகிறார். அது அவரது உலக நாயகன் என்ற தன்மையைக் காட்டுகிறது.
            சத்யராஜூக்குத் தமிழ்த் திரையுலகம் வாரி வாரி வழங்கி இருக்கிறது. இப்போதும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. அவரது நடிப்பால் தமிழகம் பெருமைபட்டுக் கொள்கிறது. இது போன்ற நடிப்பால் சிறுமைபட்டும் கொள்கிறது.
            தந்தை பெரியாரிடம் அவர் கற்றதாக அவரே அடிக்கடிச் சொல்கின்ற தன்மானத்தை இனி அவர், கற்க கசடற கற்றவைக் கற்றபின் நிற்க அதற்குத் தக.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...