24 Apr 2017

சொல்லப்படாதவை


சொல்லப்படாதவை
தொடர்ந்து வாசித்தவன்
ஒரு மாறுதலுக்காக
இடைஇடையே வாசித்தான்
நிறைய விசயங்கள் புரிந்தன.
*****

புனைதல்
என் கவிதைக்கு
நான் விரோதி என்றவன்
நிறைய கவிதைகளை
எழுதிக் கொண்டு இருந்தான்
நிறைய விரோதிகளை
உருவாக்கிக் கொள்ள
விரும்புபவனைப் போல.
*****

தடுமாற்றம்
கடைசி வரியில்
தடுமாறி நின்றன
உண்மையா
பொய்யா
என்று
உண்மையும் பொய்யும்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...