26 Apr 2017

சாவடி


சாவடி
"சாவடிப்பானுங்க என்று தெரிந்தும்
ஏன் சாதி மாறி
கல்யாணம் பண்ணிகிட்டே?"
என்ற தோழியிடம் சொன்னாள் அவள்,
"சாதி மாறுனா
சாதிக்காரஞ் சாவடிப்பான்.
சாதியில் பண்ணுனா
புருசங்காரஞ் சாவடிப்பான்!"
*****

குழப்பியடித்தல்
நிலவைச் சரியாக
சுட்டிக் காட்டியவர்கள்
வானத்தைத்தான்
அதுவென்றும்
இதுவென்றும்
குழப்பியடித்தார்கள்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...