24 Apr 2017

ரகசியக் குறிப்பு


ரகசியக் குறிப்பு
            "அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை!" உளவுத்துறை ரிப்போர்ட் தலைமைக்குப் போய்க் கொண்டிருந்தது, வெளியே நடந்து கொண்டிருந்த விவசாயப் போராட்டம் குறித்து.
*****
கார்ப்பரேட்
            வாட்டர் பாட்டிலில் எஞ்சியிருந்த தண்ணீரை எப்படிக் குடிப்பதென்று தெரியாமல் உருட்டிக் கொண்டிருந்த காக்கையிடமிருந்து அதை பிடுங்கிக் கொண்டுப் போனது நரி.
*****
என்ன பண்றது?
            "மக்கள் ‍குடிநீருக்காக அங்கங்க போராட்டம் பண்றாங்களாம்! என்ன பண்றது?" இச் கொட்டியபடியே நீச்சல் குளத்தில் உல்லாசக் குளியில் போட இறங்கினார் தலைவர் ஜலகண்டேஸ்வர்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...