9 Apr 2017

அணைப்பு


அணைப்பு
"விளக்கை அணைக்கலாமா?"
என்றவனிடம்
ஐநூறை முன்கூட்டியே
கையில் வாங்கிக் கொண்டவள்
சலிப்பாகச் சொன்னாள்,
"நீயே அணைச்சுக்கோ!"
*****

சபதம்
அமாவாசைக்கு
ஒரு நாள் முன்னதாக
சபதம் செய்யலாம்
"இந்த நிலவைத்
தொலைச்சு கட்டுறேனா இல்லையா பாரு!"
*****

இலவசம்
மின்மினிப் பூச்சிகள்
பறக்கும் பொழுதில்
வெளிச்சம் என்பது இலவசம்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...