8 Apr 2017

குழந்தை வாகனம்


குழந்தை வாகனம்
ஊரெல்லாம் சுற்றியது மறந்திடுமோ?
பள்ளம் மேடு ஏறிய பாதைகள் மறந்திடுமோ?
ஆணியும் கம்பியும் உடல் கிழித்தது மறந்திடுமோ?
தேய்ந்து கிடக்கும் டயர்
பணி நிறைவு கொண்டு
அந்திமக் காலத்தில் நிற்க நேரமின்றி
கை மாறி, கை மாறி
ஓடிக் கொண்டிருக்கிறது
குழந்தை வாகனமாய்.
*****

வசதி
தூரத்தே இருந்த
அந்த ஒற்றைக் கம்ப
விளக்கு வெளிச்சம்தான்
தடையாக இருந்தது.
"பொட்" என்ற உடைந்தது
இருள்திரை விழுந்தது
பட்டைச் சாராயம் குடிக்கவும்
காமம் செய்யவும்
வசதியாக.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...