8 Apr 2017

நேரம் ஒரு கேடு


வாசல்
நான் ஒரு மாதிரியாக எழுதலாம்
நான் எழுதாத மாதிரியும்
நீங்கள் புரிந்து கொள்ளலாம்
எழுத்திற்கு இரண்டு வாசல்கள் உண்டு
நீங்கள் எந்த வாசல் வழியில்
வேண்டுமானால் வாருங்கள்
வந்த பின், வெளியேறும் வாசல் ஒன்றுதான்
வெட்டவெளி என்பது அந்த வாசலின் பெயர்.
*****

நேரம் ஒரு கேடு
கோழியிருந்தால்
அதிகாலை ஒலிப்புச் சத்தம்
கேட்டிருக்கும்.
நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும்
பிராய்லர் கோழிகளுக்கு
அதிகாலையும் தெரிவதில்லை
அந்தி மாலையும் தெரிவதில்லை.
நேரங்கெட்ட நேரத்தில்
சாகுபவைகளுக்கு
நேரம் ஒரு கேடோ
என்ற ஒரு நினைப்பிருக்கக் கூடும்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...