8 Apr 2017

வர்லாம் வர்லாம் வா!


வர்லாம் வர்லாம் வா!
            "ப்ளீஸ்ப்பா! அந்தப் பேய் படத்துக்கே போவோம்பா!" கெஞ்சினாள் அம்முக்குட்டி.
*****
ஒரு நாயகன்
            அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து திரையில் பறந்து பறந்து அடித்த நாயகன், தன் படம் வெளியாவதற்கு முன் இணையத்தில் வெளியான காட்சிகளைக் கண்டு பொங்கி எழுந்து மனதுக்குள் விழுந்து விழுந்து குமுறினான்.
*****
நெவர் தி லாஃப்
            "மதவாத சக்திகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது!" என்பதைக் கேட்டுக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டார் ரிசார்ட் ஓனர் ரங்கபாஷ்யம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...