7 Apr 2017

பல்லி விழும் பலன்


பல்லி விழும் பலன்
விழுங்கும் பூச்சிகளில்
வயிறு நிறைகிறது
பல்லிக்கு.
பாஷாணம் ஆகிறது
சகுனம் சொல்லும்
பல்லி விழுந்த உணவு.
அறைந்து சாத்திய கதவில்
வாலிழந்த பல்லி
துடிக்கும் வாலினைப்
பொருட்படுத்தாமல்
இணை தேடி பரபரக்கும்.
ஒட்டடை அடிக்கும் போது
உருண்டு உடையும்
பல்லி முட்டைகள்.
அன்றிரவு மகன்
எதேச்சையாக
தொலைக்காட்சியில் மிரட்சியோடு
பார்த்துக் கொண்டிருக்கிறான்
டைனோசர் படம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...