14 Apr 2017

சாட்சி மரம்


நீட்டம்
நீரை எதிர்பார்த்து
கிடைக்காத போது
வேரை நீட்டிக் கொள்ளும்
மரம்!
*****

சாட்சி மரம்
காம்பெளண்ட் சுவர்கள் போலோ
கம்பி வேலிகள் போலோ
பிரித்து விடாது
இருபுறமும் கிளைகளை விரிக்கும்
உயிர்வேலிகள்.
வண்ணத்துப் பூச்சிகள் கூடு கட்டும்
தட்டான்கள் சுற்றி வரும்
குருவிகள் கும்மியடிக்கும்
வருடத்திற்கு நான்கு பேர்க்கு
வேலி கட்டவென வேலை கொடுக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் தழை கொடுக்கும்
இறுதியில் விறகாகும்
போத்து நட்டுக் கட்டும் வேலிகளில்
பெருத்த மரம் ஒன்றோ இரண்டோ
நிச்சயம் உருவாகி விடும் என்பதற்கு
பெரிய வீடு காம்பெளண்ட் கட்டப்பட்ட போது
வேரோடு வெட்டப்பட்ட
நான்கு மரங்களே சாட்சி.
*****

No comments:

Post a Comment