அறியாதவர்கள்
கொள்ளையடிக்கத் தெரியாதவனை
பிழைக்கத் தெரியாதவன்
என்றும் சொல்கிறார்கள்
கொள்ளையடித்துப் பெருஞ்செல்வம்
சேர்த்தவனை
தலைவன் என்றும் ஏற்றுக்
கொள்கிறார்கள்
கொள்ளை போவது
செல்வமன்று
வாழ்வு என்பது அறியாதவர்கள்.
*****
விசுவாசம்
கொள்ளையடித்தக் காசை
வைத்து
உழைக்கச் செய்வார்கள்
உழைக்க வைத்து
அதிகாரத்தைப் பிடிப்பார்கள்
மீண்டும் கொள்ளையடிக்க.
நாம் உழைத்துக் கொண்டே
இருப்போம்
வறுமையையும் அடிமைத்தனத்தையும்
ஊதியமாகப் பெற்றுக் கொண்டு
முன்னினும் அதிக விசுவாசமாக.
*****
No comments:
Post a Comment