3 Apr 2017

பேருந்து நினைத்தால்...


பேருந்து நினைத்தால்...
வருவதற்கு முன்னே
சென்று விடுகின்றன
காத்திருக்க வைத்து வருகின்றன
தளும்பி வழியும் கூட்டத்தில்
ஏற முடியாமல் செய்து விடுகின்றன.
பேருந்து நினைத்தால்
எதையும் செய்யும்
ஏற்றிச் செல்லவும் செய்யும்
ஏற்றிச் செல்லாமல்
கூனிக் குறுகி நிற்க வைத்து
கொல்லவும் செய்யும்.
*****

வாழ்வு
பல நாள்
பத்திரமாக வாழ்ந்தது
என்றுதான்
சொல்ல வேண்டும்
சோசியம் சொன்ன
கூண்டுக்கிளி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...