8 Apr 2017

எரியும் கேள்வி


எரியும் கேள்வி
எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்
ஒரு கேள்வி,
பாடை எரிக்க
விறகு இல்லாமல்தான்
பாதி எரிந்தானா
காதல் திருமணம்
செய்து கொண்ட அவன்?
*****

அடையாளம்
"நீங்கதான் ராமநாதனா?" என்றார்.
"ஆம்!" என்றேன்.
"ஆர்.ராமநாதனா?" என்றார்.
"ஆம்" என்றதற்கு
"4 வது குறுக்குத் தெரு,
சந்தைப் பேட்டையில இருக்கீங்க?" என்று
விலாசம் கேட்டதற்கும்
"ஆம்" என்றேன்.
"நான் நினைச்ச மாதிரி
இல்ல நீங்க!"
என்றவர்
எதற்காக என்னை
சந்திக்க வந்தார்
என்பதைச் சொல்லாமல் கூட
சென்று விட்டார்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...