26 Apr 2017

உபதொழில்


வாழ்க்கை
கெட்டது இன்றைக்கு
நல்லது நாளைக்கு
என
வாழ்க்கை முழுதும்
கெடுதலோடு மட்டும்
என்னவென்றே புரியாமல்
வாழ்ந்து செத்தார்
தம்பைய்யா தாத்தா.
*****

உபதொழில்
உபதொழில் ஒன்று
வைத்திருக்கிறார்கள்
கறைபடியாத
கையூட்டுப் பெறாத
அரசாங்கத்துப் பணி செய்யும்
அந்தராத்மாக்கள்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...