தர்மாஸ்பத்திரி வைத்தியம்
முதல் வைத்தியம்
டாக்டருக்கு
சரியான நேரத்துக்கு
வரச் சொல்லி
ஒரு பிரிஸ்கிரிப்ஷன்.
வளைந்த கழுத்து
உடைந்த இடுப்பு
சீழ்ப் பிடித்த பாதங்களோடு
தவழ்ந்து வந்தவனை
வரிசையில் நிற்கச் சொல்லி
வற்புறுத்தினர்
வைத்தியசாலை விதிப்படி.
நொந்து கொண்டே
நின்றவன் முறை வந்த போது
நேரம் முடிந்து விட்டதாகக்
கிளம்பிச் சென்றார்
மருத்துவர்.
அவர் பெயர், பட்டம்,
பதவியோடு
பார்வை நேரம்
மாலை 4 - 8 என்று
போர்டு தொங்கிக் கொண்டிருந்த
அந்தக் கட்டடத்தில்
இரவு 9 மணியைக் கடந்தும்
பார்த்துக் கொண்டிருந்தார்
அந்த டாக்டர்.
*****
No comments:
Post a Comment