6 Apr 2017

நொடிகள்


சொல்
பொட்டச்சிப் பின்னாடி
சுத்தாதடா
என்பாராம்
பொம்பள வியாதியோடு
திரிவதாகச் சொல்லப்படும்
காளியண்ணன்.
*****

நொடிகள்
ஒரு காலத்திலிருந்து
இன்னொரு காலத்தைப் பார்க்கிறோம்
அது அபத்தம் என்கிறோம்
இதை இப்படிச் செய்திருக்க வேண்டும் என்கிறோம்
கடந்த காலத்தில் சென்று
மாற்ற முடியாது என்று தெரிந்தும்
இது போன்று நடந்திருக்க வேண்டும் என்று
ஒவ்வொன்றுக்கும் ஒரு கருத்து வைத்திருக்கிறோம்
இந்த நொடி என்பது கடந்து கொண்டிருக்கிறது
அடுத்த நொடியில்
‍அதை வாழ்க்கைப்படுத்துவோம்
என்ற புரிதலுடன்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...