7 Apr 2017

முடிவு


முடிவு
ஏதோ ஒரு புள்ளியில்
தொடங்கத்தான் வேண்டும்
ஒரு புள்ளியில்
முடிக்கத்தான் வேண்டும்
இடைப்பட்ட புள்ளிகளிலும்
ஆரம்பமும் முடிவும்
இருந்திருக்கலாம்
ஒரு புள்ளியை ஆரம்பமாகவும்
இன்னொன்றை
முடிவுப் புள்ளியாகவும்
ஆக்கி விட்டதாக
குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன
இடைப்பட்ட புள்ளிகள்.
*****

சேப்டி
எங்கு சென்றாலும்
ஹெல்மெட்டும் கையுமாக
"சேப்டி முக்கியம்டி!" என்பான்
பேண்ட பாக்கெட்டில்
எப்போதும்
ஒரு காண்டமை
வைத்திருக்கும் நண்பன்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...