4 Apr 2017

விதியெனப்படுவது...


விதியெனப்படுவது...
விதியெனப்படுவது யாதெனில்
பேருந்தில் பலகைக் கழன்று
கீழே விழுந்து இறப்பது,
பெருங்கூட்ட நெரிசலில்
சிக்கி மாய்வது,
சாலையோரத்தில் சென்று கொண்டிருக்கையில்
லாரி ஏறி சக்கை சக்கையாய் நசுங்குவது,
நடைபயிற்சி செல்கையில்
வெட்டிக் கொல்லப்படுவது,
பலர் பார்த்திருக்க
ஆசிட் வீசி சிதைக்கப்படுவது,
எவனுக்கோ விரித்த என்கெளண்டரில்
எதேச்சையாய் செல்பவன்
புறமார்பு கொள்வது,
விசாரணைக் கைதியாய்ச் சென்று
உயிரற்றப் பிணமாய் வீடு திரும்புவது,
ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி
ஆபரேசனின் போது
பொது மருத்துவமனையில் மாய்வது,
சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போதே
காய்ச்சலில் போய்ச் சேர்வது,
எவனோ வைத்த குண்டுக்கு
பயணியராய்ப் பலியாவது...
இப்படி பல உண்டெனினும்
மாற்றுக் கருத்துகள் கொண்டதற்காய்
அரிவாளால் வெட்டியோ, துப்பாக்கியால் சுட்டோ
கொல்லப்படுவதும்
அகதியாகி உயிர் தப்பிச் செல்கையில்
நடுக்கடலில் சாவதும் விதியில் உண்டெனக் கொள்க.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...