9 Apr 2017

பிசாசு


பிசாசு
அதுவாகத் தொடங்குகிறது
அதுவாக அடங்குகிறது
எழுத்தென்னும்
மாயப் பிசாசு.
*****

நான்
நான் இங்குதான் இருக்கிறேன்
உன் முன் இருக்கிறேன்
என் பெயரிலிருந்தோ
என் படிப்பிலிருந்தோ
என் பேச்சிலிருந்தோ
என்னைப் பாராதே.
என் சாரத்திலிருந்து
என்னைப் பார்.
ஒருவேளை நான்
அங்கிருக்கக் கூடும்.
*****

No comments:

Post a Comment