3 Apr 2017

சேய் பூ


கேள்வி
குஞ்சுகளைக் கொத்தி விரட்டி விடும்
கோழியைப் பார்த்து
கேட்க வேண்டும்,
"அத்தனை நாள்
அடை காத்த கோழி நீதானா?"
*****

சேய் பூ
கொஞ்சம் அவகாசம் கேட்கும்
இடைவெளியில்
மலர்வதற்கு முன்னே
பறிக்கப்பட்டு விடுகின்றன
பூக்கள்.
சூடுபவர்களுக்குத் தெரியுமோ
தாய் பார்க்காது மலர்ந்த
சேய் பூக்கள் இவைகளென!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...