விருப்பம்
நிஜமாகவே
உனக்கொரு
புத்திசாலித்தனம் இருக்குமானால்
நீ
நினைவுகளை
விரும்ப மாட்டாய்.
*****
மூலம்
அது எங்கிருந்து
வருகிறது என்று தெரியவில்லை
ஆனால் வருகிறது என்றேன்
வழிந்து கொண்டிருந்த
கவிதையைக் காட்டி.
*****
பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகளை
ரசித்துப் பார்க்கும்
கண்கள் எங்கும்
பட்டாம்பூச்சிகள்.
*****
No comments:
Post a Comment