14 Apr 2017

முச்சந்தி கறிக் கடை


முச்சந்தி கறிக் கடை
முச்சந்தியின் இடது ஓரத்தில்
பைசல் கோழிக் கறிக் கடை உள்ளது
வலது ஓரத்தில்
நான்கு கடைகள் தாண்டிச் சென்றால்
ராவுத்தர் ஆட்டுக்கறி கடை உள்ளது
முச்சந்தி பிரியும் இடத்தில்
முருகேசன் காடைக்கறி கடை உள்ளது
முச்சந்தியில் அவ்வபோது
ஒரு மனித கறிக்கடை உருவாகி
கெளரவக் கொலைகள் என்ற பெயரில்
சாதி மாறி மணம் செய்து கொண்டவர்களை
ஊரே பார்க்க
துடிக்கத் துடிக்கப் பொலி போடப்படுவதும் உண்டு.
*****

No comments:

Post a Comment