20,000
- ஐக் கடந்து... இணைப்பில் கலந்து... இன்பத்தில் கரைந்து...
இருபதாயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது நம்
வலைப்பூ.
உங்கள் அன்பைத் தவிர இதற்கு வேறு எதுவும்
காரணமில்லை.
கலை நம்மை கட்டி அணைக்க, உணர்வு நம்மை
ஒன்று சேர்க்க, வலைப்பூ எனும் ஆலயத்தில் நாம் தினம் தினம் சந்திக்கிறோம்.
உவப்ப தலை கூடி உள்ளப் பிரிதல் என்றார்
வள்ளுவர். நமக்கு இங்கு உள்ளப் பிரிதல் என்பதே இல்லை. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி
நேரமும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இணையத்தின் மூலம் நமது வலைப்பூவில் நாம்
சந்தித்து தலை கூடிக் கொள்கிறோம்.
அதே பொழுதில், புணர்ச்சிப் பழகுதல் வேண்டா
உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்பதற்கும் நம் வலைப்பூவே தக்கச் சான்றாகிறது. வலைப்பூவில்
மட்டும் சந்தித்துக் கொள்ளும் உலகமெனும் குக்கிராமமாகிய ஒரு பூங்கொத்தின் மலர்களாக
நாம் இருக்கிறோம்.
இன்னும் ஆயிரம் எண்ணங்களால், லட்சம் உணர்வுகளால்,
கோடி கனவுகளால் நாம் தொடர்ந்து சந்திக்க இருக்கிறோம்.
தொடர்ந்து இணைந்திருப்போம். சமகால தமிழ்நிலம்
குறித்த நம்பிக்கை விதைகளை நாளும் விதைத்திருப்போம்.
விரைவில் சிறுகதைகளால் ரசனை குறித்த பெருங்கதைகளை
பேச வேண்டும் நாம். பேசுவோம். அன்பு மணம் வீசுவோம்.
*****
No comments:
Post a Comment