7 Apr 2017

சில சிரமங்கள்


சில சிரமங்கள்
கொஞ்சம் சிரமம்தான்
முதல் தேதி வந்து விடும்
சம்பளத்திற்காக
முப்பது நாளும்
நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு
உட்கார்ந்திருப்பது.
*****

விரல்கள்
கட்டை விரலால்
பொட்டிடுவார்கள்.
மோதிர விரலுக்கு
மோதிரம் செய்வார்கள்.
நடுவிரலை
பாம்பு விரலாக்குவார்கள்.
ஆள்காட்டி விரலை
சுட்டிக் காட்டி
சுட்டு விரல் என்பார்கள்.
சுண்டு விரலைப் பயன்படுத்தி
ஒன் பாத்ரூம் கேட்பார்கள்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...