5 Apr 2017

கனவெனும் ஜென்மம்


கனவெனும் ஜென்மம்
கனவுகளுக்கு
முன் பின் தெரியாது
அர்த்தங்கள் கிடையாது
காலச் சக்கரத்தை
சுக்கு நூறாக்கிச் சுழல்கின்றன
அதன் காட்சிகள்
பால்யத்தின் கனவொன்றில்
வயதான கிழவன் போல
கிழப் பருவத்தில் ஒரு குழந்தையைப் போல
பரீட்சை நாள்களில் பெயிலாவது போல
தன் இஷ்டத்துக்கு
கலைத்துப் போடும் சீட்டுகள்
கனவுகளிடம்!
ஜோக்கர் ஆவதும், குயின் ஆவதும்
சீட்டை மாற்றிப் போட
கனவுக்குக் கண நேரம் ஆகாது
உயிரோடு உறங்குபவர்களைப்
பிணமாக்கும் கனவு
வந்து போகும்
விழித்து உயிரோடு இருப்பதை உணர்வதும்
விழிப்பதற்குள் உயிர் போவதும்
இன்னொரு கனவே!
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...