22 Mar 2017

தழும்பு


தழும்பு
பாய் பிரெண்டை
அழைத்து வரும் மகள்
அம்மாவிற்கு அறிமுகப்படுத்துகிறாள்.
வாசல் படியில் நின்று
விலாசம் கேட்டவனுக்கு
விளக்கி விலாசம் சொன்னதற்காய்
அற்றை நாளில்
தொடையில் சூடு வாங்கிய அம்மா
தழும்பு மறைய
ரசித்துச் சிரிக்கிறாள்
காலத்தைத் துளைத்து
தன் தாயின் சூட்டுக்கோலை
தணித்து விட்டப் பொறுமையோடு.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...