27 Mar 2017

உயர் பேச்சு


உயர் பேச்சு
அங்கங்கே கைவைத்து
எடுத்துச் சென்று விடும்
நூறையும், ஐநூறையும்
யாருக்கும் தெரியாமல்
மறைத்து விடும் அம்மா
எப்போதோ கொடுக்கும்
அஞ்சுக்கும் பத்துக்கும்
உயர்த்திப் பேசுவாள்
குடிகார அப்பனை.
*****

கேள்வி
பேசுவதெல்லாம் பொய்தான் என்று
தெரிந்த பின்னும்
கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
கொடுத்த ஐநூறுக்கு
பொய்முகங்களை வாங்கி
மாட்டிக் கொண்ட
மக்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...