28 Mar 2017

எச்சம்


எச்சம்
புத்தகத்தின் பக்கம் ஒன்றில்
வைக்கப்பட்டிருக்கும் மயில் இறகில்
காடழித்து உருவான எச்சமாய் புத்தகமும்
மயில் அழித்து உருவான எச்சமாய் இறகும்.
*****

விபத்து
லாரியொன்று மோதிப் பார்த்த விபத்து
ஒவ்வொரு முறையும்
லாரியைப் பார்க்கும் போது
விபத்தாகிறது.
*****

கூண்டு
அப்பாவித்தனமாக
வெளியில் சொன்னான்
பறக்க நினைக்கும் ஆசையை.
அவனுக்கே தெரியாமல்
தயாரித்து முடித்தார்கள்
அவனுக்கான கூண்டை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...