22 Mar 2017

சத்தமில்லாத உலகில்


வருகை
அம்மா செத்தப் பின்
வருவதை நிறுத்திக் கொண்டது
பக்கத்து வீட்டுப்
பூனை!
*****

விலக்கு
தொடாதே தீட்டு என்று
சொல்லும் அம்மாவிற்கு
மாத விலக்கு ஒழிந்து
இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.
*****

சத்தமில்லாத உலகில்
நம் சத்தங்கள் கேட்டால்
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விடும் என்றாய்.
செவியற்ற நட்சத்திரங்களின் உலகில்
நாம் இருக்கிறோம் என்பதை
உனக்கு எப்படி புரிய வைப்பேன்?
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...