21 Mar 2017

இரகசியங்கள்


இரகசியங்கள்
என் அந்தரத்திற்குள்
உனக்கோர் இடம் இருக்கிறது
அதை வந்துப் பார்க்க விழைவோர்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
நம்முடைய ரகசியங்களை!
இரகசியங்களில் ஒன்று கூட
உண்மையில்லை எனும் போது
சிரிக்கிறோம்
உண்மையாகும் போது
கோபிக்கிறோம்
அந்தரங்கங்களை உடைத்து விடும்
நாளில்
இரகசியங்கள் நம்மைப் பார்த்து
சிரிக்கின்றன
அந்தரங்கங்கள் உடைந்து விழும்
நாளில்
இரகசியங்கள் நம்மைப் பார்த்து
கோபிக்கின்றன.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...