26 Mar 2017

மாடுகள்


மாடுகள்
வைக்கோல் போடப்படாத மாடுகள்
போஸ்டரைத் தேடித் தின்கின்றன.
அதுவும் கிடைக்கப் பெறாத மாடுகள்
பாலிதீன் பைகளைத் தின்கின்றன.
காலையாகி விட்டாலோ
மாலையாகி விட்டாலோ
தவறாது தேடிப் பிடித்து
பாலை மட்டும் கறந்து கொள்கிறார்கள்
மாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.
அவர்களிடம் சென்று
பசு மாட்டுப் பால் அல்லோ என்று
வாங்கிக் கொள்கிறோம்
மாடுகள் போஸ்டரையும், பாலிதீன்களையும் தின்ன
வேடிக்கைப் பார்த்த நாம்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...