27 Mar 2017

மின்மினி


விம்மல்
எப்படியோ இந்த விபத்தில்
தப்பித்தவன்
இன்னொரு விபத்தில் சிக்கிக் கொள்கிறான்
இன்று முழித்த முகமே சரியில்லை என்ற
விம்மலோடு.
*****

மின்மினி
நின்று போயிருந்த
தெருவிளக்கைச் சுற்றிப் பார்த்தேன்
மின்மினிப்பூச்சிகள்.
*****

காசி
"காசிக்குப் போய்ட்டு வந்தேன்" என்றார்
அதிகாரத்தைக் கைவிட விரும்பாத
மேனேஜர்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...