14 Mar 2017

வாசாப்பு


வாசாப்பு
பழி தூற்றுவது என முடிவான பின்
உன் கையில் ஆசிட் கிடைக்கவில்லை
வார்த்தைகள் சிக்கின.
நீ வீசினாய்
காலத்தின் பெருவெளியைக் கடந்தும்
துடைக்க முடியாத களங்கத்தை!
எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் நான்
ஈ.பி.கோ. சட்டங்களைத் தேடியபடி இருக்கிறேன்.
நீ புதுப்புது ஆசிட் பாட்டில்களை
வாங்கியபடி இருக்கிறாய்.
*****

No comments:

Post a Comment