18 Mar 2017

தாம்பத்யங்கள்


ஆதரவு
வாங்கி வைத்த ரோசாச்செடி
கடைசியில்
நீர் ஊற்றாமல்
செத்துப் போனது!
*****

தாம்பத்யங்கள்
ஒரு குழந்தையைப் பெற்ற பின்
எப்போதோ நிகழும் சில நள்ளிரவுகளின்
கட்டித் தழுவலுக்கும், முத்தமிடலுக்கும்,
சின்னதொரு மெய் தீண்டலுக்கும்
மிகுந்த விழிப்போடு
ஆணுறைகளைத் தேடிச் செல்வதற்குள்
முடிந்து விடுகின்றன
தாம்பத்யங்கள்!
*****

No comments:

Post a Comment