21 Mar 2017

முனகல்


முனகல்
இரவின் முனகல்களை
துயில் மீட்டியபடி
பகலில் கண்ணுறங்குகின்றன
நட்சத்திரங்கள்.
*****

உண்பது என்பது...
உண்ணும் உணவை
உண்ணும் முன்னே
உணவை
உண்டு கொண்டிருக்கிறது
உணவில் இருக்கும்
புழு!
*****

ஓவியங்கள்
ஒவ்வொரு வெளிச்சமும்
இரவுக்குள் வரைகின்றன
வெவ்வேறு ஓவியங்கள்.
*****

No comments:

Post a Comment