20 Mar 2017

சொல்


சொல்
செத்தா சுமக்க
நாலு பேர் வேணும்
என்ற
பொன்ராசு தாத்தாவின்
சாவு
காசியில்
கங்கையில் குளித்த போது
நிகழ்ந்ததாம் என்று
எல்லாரையும் எடுத்தெறிந்து பேசும்
தங்கராசு தாத்தா அடிக்கடி சொல்வார்.
*****

முளை
இரவில் புதைத்த
ரகசியங்கள்
பகலில் முளை விடுகின்றன.
பகலின் ரகசியங்கள்
இரவில் நட்சத்திரங்களாய்ப் பூக்கின்றன.
*****

No comments:

Post a Comment