27 Mar 2017

மறுபடியும் வரப் போகும் அழைப்பு


புழக்கம்
அடிக்கடி,
"சந்நியாசம் வாங்கப் போறேன்!" என்கிறார்
யாருக்கும் தெரியாது என்று
நினைத்துக் கொண்டு
தெற்குத் தெருவில்
ரெண்டு வீட்டில்
நடுச்சாமத்தில் புழங்கி வரும்
பெரியப்பா.
*****

மறுபடியும் வரப் போகும் அழைப்பு
புதிதாக வந்திருக்கும்
இந்த அழைப்பு
இரண்டாண்டுகளுக்கு முன்
இறந்துப் போன நண்பனுடையது.
எதைக் கேட்பது என்று புரியாமல்
அவன் பேசுவதை எல்லாம்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
"நான் மறுபடியும் பண்றேன்!" என்று
அவன் அழைப்பைத் துண்டிக்க
மறுபடியும் வரப் போகும்
அவன் அழைப்பை எண்ணி
திகில் கொள்ள ஆரம்பிக்கிறது மனசு.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...