28 Mar 2017

நனைதல்


நனைதல்
"கொட்டும் மழையில்
நனையாதே!"
என்றாள்.
அவள் அப்படிச் சொல்வதற்காகவே
கொட்டும் மழையில்
நனைந்தது
கொட்டும் மழைக்கும்
எனக்கும் மட்டுமே
தெரியும்.
*****

ஏக்கம்
அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிக் கொண்டு இருக்கிறது
அம்மாவை ஏங்க வைத்து.
*****

பாடம்
ஆடும் தூளியில்
தனி ஊசல்
பாடம் படித்துக் கொண்டிருந்தாள்
தம்பியைப் பார்த்துக் கொள்ளும்
அக்கா.
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...