28 Mar 2017

நீங்க யாருடா?


விடுதல்
            கிராமத்துச் சொத்துகளை விற்க தன்னிடம் அனுமதி கேட்க வருகிறார்கள் என்பதை அறிந்த அப்பத்தா அதற்கு முன்னே மூச்சை விட்டாள்.
*****
கொஞ்ச காலம்
            "இது கொஞ்ச காலம்தான். கிராமத்து வயல்களை விற்று நகரத்துப் ப்ளாட்டுகளை வாங்குவாங்க. அப்புறம் நகரத்துப் ப்ளாட்டுகளை விற்று விட்டு கிராமத்து வயல்களை வாங்க வருவாங்க!" என்றார் கேன்சரால் சாவதற்கு முன் பரந்தாமன்.
*****
நீங்க யாருடா?
            "எங்கள மணல் அள்ளக்கூடாதுன்னு தடுக்குறதுக்கு நீங்க யாருடா?" என்றனர் உள்ளூர்வாசிகளைப் பார்த்து வெளியூர்லேர்ந்து மணல் அள்ள வந்த லாரிக்காரர்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...