23 Mar 2017

ஞானம்


பாதுகாப்பு
பறவைகள் செத்து விட்டன
பாதுகாப்பாக இருக்கிறது
பறவைகள் குறித்த ஓவியங்கள்!
முதியோர் இல்லத்தில் இருக்கும்
முதியவரின் கைத்தடி
பாதுகாப்பாக இருக்கட்டும்
நமது வீட்டில்!
*****
பாடம்
பிச்சைக்காரர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்
என்று பொறாமைபடக் கூடாது
பத்தாயிரம் பணம் கட்டினால்
பத்து மணி நேரம் செமினாரில்
கற்றுக் கொண்டு வந்து
நீயும் பிச்சையெடுத்து பெரும் பணம் சேர்த்து
பெருமைப்படு
*****
ஞானம்
ஆண்டவன் கொடுக்க மாட்டான் என்பதை
அவன் சந்நிதியில் அமர்ந்து
பிச்சையெடுக்கும்
பிச்சைக்காரர்களே அறிவார்கள்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...