3 Mar 2017

ஆயாசம்


ஆயாசம்
"நமக்கெல்லாம் ஏ.டி.எம். மிஷின் மூலமா பணம் கொடுக்குறாங்க! பணக்காரங்களுக்கு ஏ.டி.எம். மிஷினையே கொடுக்குறாங்க போலிருக்கு!" தினம் கட்டுக் கட்டாகப் பிடிபடும் ரெண்டாயிரம் நோட்டுகள் பற்றி வரும் செய்திகளைப் பார்த்து அலுத்துக் கொண்டே சொன்னார் நான்கு நாட்களாக ஏ.டி.எம். வரிசையில் நின்று பணம் கிடைக்கப் பெறதா ராமசாமி.
*****
டைம் மிஷின்
டைம் மிஷினில் சென்று பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டு வந்தான் சயின்ட்டிஸ்ட் சந்திரகாந்த்.
*****
எங்கே நிம்மதி?
மனசு சரியில்லை என்று வந்த ஆடிட்டரிடம், பழைய நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று விசாரிக்க ஆரம்பித்தார் சாமியார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...