3 Mar 2017

சில்லரை வியாபாரம்


சில்லரை வியாபாரம்
ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டை
வைத்துக் கொண்டு
நான்கு பேர்களையேனும்
சில்லரை வாங்காமல்
சிகரெட்டும், குட்கா பாக்கும்
வாங்க வைத்து விடுகிறார்
அநதப்
பெட்டிக்கடைகாரர்!
*****

படிப்பினை
வாங்கி வைத்துக் குடித்த
குவார்ட்டர் பாட்டிலில்
மண்ணெண்ணெய் ஊற்றி
ஒளியேற்றி
படித்துக் கொண்டிருக்கிறான்
மகன்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...